வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைந்து கொள்ளுமாறு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது.
தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஜனாதிபதி வேட்பாளராக தாங்கள் பரிசீலித்து வரும் நான்கு வேட்பாளர்களில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவும் அடங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.