ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (27) சந்தைகளில் ஆயிரம் ரூபாவிலிருந்து 1400 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவு முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த தினங்களில் சந்தைகளில் பச்சை மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று ஒரு கிலோ பச்சை மிளகாய் பேலியகொடை சந்தையில் 1200 – 1400 ரூபா வரையிலும், கண்டி சந்தையில் 1050 – 1100 ரூபா வரையிலும், தம்புளை சந்தையில் 1100 – 1300 ரூபா வரையிலும், நுரைச்சோலை சந்தையில் 1000 – 1100 ரூபா வரையிலும், தம்புத்தேகம சந்தையில் 1100 – 1200 ரூபா வரையிலும், கெப்பட்டிபொல சந்தையில் 1000 – 1100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைப்பட்டியலுக்கு இங்கே அழுத்தவும் - விலைப்பட்டியல்