Our Feeds


Thursday, December 21, 2023

SHAHNI RAMEES

பாடசாலைகளுக்கான விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 

2023ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை நாளை (22) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவிக்கின்றது.

புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »