ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மொடல் ஸ்மார்ட் கடிகாரங்கள் விற்பனைக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.
கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Pulse Oximeter’ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்த கோரி நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.