வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.