தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு – நீர் கட்டணக் கொடுப்பனவு செலுத்துகின்றமை, சுமார் 15 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
இன்னும் பெறப்பட வேண்டிய கட்டணம் சுமார் 12 பில்லியன் ரூபாய் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பத்மநாத கஜதிராராச்சி கூறியுள்ளளார்.
சரியான நேரத்தில் பணம் செலுத்துவது தேவையற்ற விநியோகத் துண்டிப்புகளைத் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளள்ளார்.
இதேவேளை, நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து – உண்பதற்கு பதிலாக, தண்ணீர் அருந்துவதற்காகவே பலர் உணவகங்களுக்குச் செல்வதால், நீர் கட்டணம் அதிகமாகும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில், சில ஹோட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறைந்த வருமானம் காரணமாக – நீர் கட்டணம் செலுத்தப்படாமல், அதன் தொகை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.