Our Feeds


Tuesday, December 12, 2023

News Editor

இ.போ.ச.வுக்குத் தேவையான எண்ணெய்யை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி


 இலங்கை போக்குவரத்துச் சபைக்குத் தேவையான எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

இலங்கை போக்குவரத்துச் சபைக்குத் தேவையான எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெய் கொள்வனவுக்கான பெறுகைக் கோரலுக்கான தேசிய விலைமுறி கோரப்பட்டுள்ளது.

 

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு ஒவ்வொரு வகையின் அடிப்படையில் Lanka IOC PLC இற்கும் மற்றும் Chevron Lubricant Lanka PLC இற்கும் எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெயை கொள்வனவு செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, குறித்த கம்பனிகள் இரண்டுக்கும் ஏற்புடைய பெறுகைகளை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

       

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »