எமது நாட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதற்காக நாங்கள் சவூதி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
தற்கமைய, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டத்தரணியொருவர் ஆஜராவதற்கான பதிலியொன்றும் (Proxy) பிரதிவாதிகளில் ஒருவர் என்ற அடிப்படையில் நயீமுல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிலி நயீமுல்லாஹ்வின் சட்டத்தரணி ஊடாக கொழும்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கூட்டமைப்புடன் (முன்னைய பெயர் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அலி சப்ரி ரஹீம் தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் அலி சப்ரி ரஹீமை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அண்மையில் தீர்மானித்தது.
இது தொடர்பில் கடந்த நவம்பர் 4 ஆம் திகதி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், பாராளுமன்ற செயலாளருக்கு உடனடியாக அறிவித்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வறிதாக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான நிலையில் மேற்படி இரண்டு கட்சிகளினதும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு எதிராக 14 நாட்கள் இடைக்கால தடை உத்தரவினை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கடந்த 13 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்வினை கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.