இஸ்ரேல் இன அழிப்பு செய்கிறது - சர்வதேச நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தென்னாபிரிக்கா.பாலஸ்தீனத்தின் - காஸா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு யுத்தத்திற்கு எதிராக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தென்னாபிரிக்கா.
நேற்று - வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்க அரசாங்கம் சார்பில் குறித்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தனது ஊடக அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.