தற்போதைய நாட்களில் சிறுவர்களின் மத்தியில் பல்வேறுப்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவலடைந்து வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளாா்.
பரிசோதனைக்கு உட்படுத்திய சிறவர்களுக்கு இடையில், அநேகமானவர்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா நோயாளர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த சில தினங்களில் சிறுவர்களின் மத்தியில் சுவாசம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் பரவலடைந்து வருகின்றன. குறிப்பாக வைரஸினால் ஏற்படும் காய்ச்சல் நிலைமை அதிகரித்துள்ளது. அநேகமாக நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, தலைவலி போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அநேகமான காய்ச்சல் நிலைமைகள் இன்புளுவென்சா ஏ மற்றும் பீ என்பவற்றால் தோற்றம் பெற்றவையாக இருந்தன.
இதற்கு மேலதிக, ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இவ்வாறான நிலைமையை அவதானிக்கவில்லை. ஆனால், சிறவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அநேகமானவர்களுக்கு இன்புளுவென்சா பரவலடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.