இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை
சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி கொல்லப்பட்டார்.இது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்த ஈரான் அரசு, டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி கொல்லப்பட்டார்.
"ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேலின் இக்குற்றச் செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்" என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நட்பு நாடுகளை ஒன்றுபடுத்தும் "ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்" (Axis of Resistance) அமைப்பில் பலரை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்காற்றிய முசாவி, ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே இராணுவ உறவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்.
இஸ்ரேலின் டமாஸ்கஸ் தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக முசாவி கொல்லப்பட்டதன் விளைவாக இஸ்ரேல்-ஹமாஸ் போர், மேலும் சில நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பல உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.