வரகாபொல – அல்கம பகுதியில் நேற்றிரவு கட்டு துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வரகாபொல பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.