இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜப்பானிய மொழிப் புலமை மற்றும் உரிய பரீட்சையில் சித்தியடைந்தால் நிர்மாணத் துறையில் சிறப்புத் திறன்மிக்க தொழிலாளர்கள் (SSW) விசா பிரிவின் கீழ் ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார்.