Our Feeds


Friday, December 22, 2023

SHAHNI RAMEES

செய்கடமை இணையத்தளத்தை முழுமையாக இடைநிறுத்த தீர்மானம்!

 

கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk என்ற இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. 

 

கொவிட் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தியதன் பின்னர் இணையத்தளம் மூலம் நிதியத்திற்கு கிடைத்த நிதி தொடர்பிலான அறிக்கையை முகப்புப் பக்கத்தில் பதிவிட்ட பின்னர் 28.10.2020 ஆம் திகதி முதல் இணைய பக்கத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த அறிவித்தல் மற்றும் நிதி தொடர்பிலான விடயங்கள் மாத்திரமே இணையத்தின் முகப்புப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

எனினும், இதனையும் முழுமையாக இடைநிறுத்த ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. தற்போது இந்த இணைய பக்கம் பயன்பாட்டில் இல்லை என்பதால் இணைய பக்கத்தின் பெயரை வேறு தரப்பினர் தவறான வழியில் பயன்படுத்துவதற்கான இயலுமை இருப்பதால் இந்த அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிடுகிறது.

 

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »