Our Feeds


Tuesday, December 12, 2023

SHAHNI RAMEES

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை...

 

இணையத்தில் தகவல்களை தேடுவோரின் முதன்மைத் தேர்வாக கூகுள் தேடுபொறி(Google Search Engine) உள்ளது.

 

இவ்வாறு கூகுள் மூலம் தேடப்படும் விடயங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்நிறுவனம் பட்டியலிடுகிறது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிடப்பட்டுள்ளது.

 

செய்திகளில் உலகம் முழுவதும் பேசும் பொருளாக உள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது. டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பிப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 

பொழுதுபோக்கு தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து ஓப்பன்ஹைமர், ஜவான் ஆகிய படங்கள் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் த லாஸ்ட் ஆஃப் அஸ், வெனஸ்டே மற்றும் ஜின்னி அண்ட் ஜார்ஜியா ஆகியவை உள்ளன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »