விடுமுறைக் காலங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பேணுமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சார திட்டங்களையும் இடைநிறுத்துமாறு அவர் கூறியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி நாட்களில் பராமரிப்புக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளை அமைச்சு அவதானித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபைக்கு அதிக நேரக் கொடுப்பனவுகளுக்காக பெரும் தொகை செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.