நாட்டின் குற்றப் பக்கத்தை இல்லாதொழிக்கும் இலக்கை கொண்டிருப்பதாகவும், அந்த இலக்கை யாரேனும் தடுத்தால் அவர்களைத் தடுப்பேன் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
எவ்வளவு “பலம்” உள்ளவர்களாக இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர், அனைத்து மாகாணங்களிலும் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண வேண்டும் என்று டிரான் அலஸ் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற பொலிஸ் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் சிலர் தற்போது ஆத்திரமடைந்து தம்மை தாக்குவதாக தெரிவித்த அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபரும் இதெல்லாம் போதைப்பொருள் பணம் என தெரிவித்திருந்தார்.
பல வருடங்களாக இந்தப் பிரச்சினைகளால் தாம் சிரமப்பட்டு வருவதாகவும், அவரை வீழ்த்த முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் துணை நிற்பேன் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.