இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் செய்கின்றனர். அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோர் பணத்தினை இழந்து வருகின்றனர்.
குறித்த மோசடியினால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் , புதன்கிழமை (27) ஒருவர் 20 இலட்ச ரூபாயை இழந்துள்ளதாகவும், மற்றையவர் 06 இலட்ச ரூபாயை இழந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.