தற்பொழுது சிறுவர்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகம் பதிவாகி வருவதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது மிகவும் அவசியமென சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல், காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகளே தொற்றுக்குள்ளான சிறுவர்களிடம் அதிகளவில் அவதானிக்கப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக காய்ச்சல் பரவும் எனின், அது இன்புளுவென்சா தொற்றாகவே காணப்படும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.