சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு இன்று(28) முதல் அமலுக்கு வருகிறது.
425 கிராம் டின் மீனின் புதிய விலை 475 ரூபா
ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் புதிய விலை 280 ரூபா
ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை 175 ரூபா
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் புதிய விலை 309 ரூபா
ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசியின் புதிய விலை 206 ரூபா
ஒரு கிலோ வெள்ளை பச்சையரிசியின் புதிய விலை 199 ரூபா என்றும் லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.