இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் தெற்கு மாவடட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 74 வயதான சமாதான நீதவான் ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 22,500 மில்லிலீற்றர் ஸ்பிரீட் , நான்கு பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 756,000 லீற்றர் கோடா மற்றும் 26 அடி நீளமுள்ள இரப்பர் குழாய் உட்பட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.