கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார்.
இவர் 2012, செப்டம்பர் 18 இல் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் தெரிவு செய்யப்பட்டு பெப்ரவரி 2015 வரை பதவியில் இருந்தார்.
மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 ஆண்டு காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை மஜீத் பெற்றார்.