ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஷை புதன்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்நாட்டு தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை (23) நடைபெற்ற பலஸ்தீனம் தொடர்பான பல்நாட்டு அரசியல் உயர்மட்ட ஆலோசனை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ரவூப் ஹக்கீம் ஈரானிய தூதுவரை சந்தித்து சந்தித்து அதன் அனுகூலங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.