நுவரெலியா, கந்தப்பளையில் இடைவிடாது தொடர்ச்சியான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக கந்தப்பளை பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் குளிரும் அதிகரித்துள்ளது.
மேலும் (27) மாலை கந்தப்பளை பிரதேசத்தை புகை மூட்டம் சூழ்ந்ததால், கந்தப்பளை நகரம் முற்றாக புகை மூட்டத்தில் மூழ்கியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இந்த நிலையில் பிரதான வீதியில் பயனிப்போர் அவதானமாக செயற்படுமாறு கந்தப்பளை பொலிஸாரால் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
அதே சந்தர்ப்பத்தில் வாகனங்களில் விளக்குகளை ஒளிரவிட்டு போக்குவரத்து மேற்கொள்ளுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஆ.ரமேஸ்)