கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 21ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.