Our Feeds


Sunday, December 10, 2023

SHAHNI RAMEES

ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது பலஸ்தீன தூதுவர் கடும் விசனம்...

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில்,  நேற்று வெள்ளிக்கிழமை (8(இலங்கை, பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமொன்று அச்சங்கத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட்டும் பங்கேற்றுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பாராளுமன்றத்தில் பலஸ்தீன, இஸ்ரேல் மோதல் சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன, இதனைவிடவும்,  பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.

அத்துடன், பலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் பல்வேறு தருணங்களில் குரல் எழுப்பியுள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது மிகவும் நெருக்கடியான சூழுலொன்று காணப்படுகின்றது.

ஆனால் இலங்கை அரசாங்கம் தற்போது பாராளுமன்றத்தில் தீர்மானத்தினை நிறைவேற்றினாலும் அதற்கு அப்பால் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

விசேடமாக,  உள்நாட்டில் பலஸ்தீனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் திட்டமிட்ட வகையில் மழுங்கடிக்கப்படுவதோடுரூபவ் அப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரங்கள் வழங்கப்படாத சூழலும் அவற்றை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகின்ற நிலைமைகளும் அதிகமாக உள்ளன.

ஆகவே,  பலஸ்தீன மக்கள் மீதான உண்மையான கரிசனைகளை வெளிப்படுத்தும் அதேவேளை இலங்கை அரசாங்கம் அதற்கு  பிரதிபலிக்க வேண்டும். அதுவரையில் எவ்விதமான எதிர்பார்ப்புக்களையும் நாம் கொள்ளவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இதேவேளை,  பலஸ்தீன தூதுவரின் வெளியேற்றத்தினை அடுத்து, குறித்த நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »