இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 இலட்சம் முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளாா்.
மக்கள் தமது தேவைக்கு ஏற்பட முட்டைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் லங்கா சதொச நிறுவனத்துக்கு நாளாந்தம் விநியோகிக்கப்படும் 10 இலட்சம் வரையிலான முட்டைகள் எதிர்வரும் 31 ஆம் திகதியாகும்போது 20 இலட்சம் வரை அதிகரிக்கி கூடியதாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு தேவையான முட்டை தொகையை இறக்குமதி செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி மாதத்தில் மேலும் 300 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் செலுத்துவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.