கொழும்பு மாநகர சபையின் அறிக்கையின்படி, கொழும்பு நகரில் ஏறத்தாழ 700 மரங்கள் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 மரங்கள் முழுமையாக அகற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 வருடங்களுக்கு போதுமான மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.