Our Feeds


Sunday, December 24, 2023

SHAHNI RAMEES

6 மாத கருவை கலைத்து புதைத்த இளம் தாய் கைது...!

 



தம்புத்தேகம தேக்கவத்தை பிரதேசத்தில் இரண்டு

பிள்ளைகளின் தாயொருவர் 6 மாத கருவொன்றை புதைத்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 


கரு 6 மாதமாக இருக்கும் போது அதனை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாக சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


 


இவர் தனது கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும், கலதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் உறவில் இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 


இதனால் அந்த பெண், கர்ப்பமாகி கருவை கலைத்த பின் புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.


 


கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அவரது குழந்தையை காணவில்லை என்றும் அநாமதேய தொலைபேசி அழைப்பை அடுத்து தம்புத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.


 


அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தம்புத்தேகம பொலிஸார் கரு புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.


 


சம்பவம் தொடர்பில் 32 வயதான பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


 


இதன்போது கைதான இருவரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »