Our Feeds


Wednesday, December 27, 2023

SHAHNI RAMEES

இணையவழி பயணிகள் இருக்கை முன்பதிவு சேவைக்காக 200 சொகுசு பஸ்கள்

 

இலங்கை போக்குவரத்து சபையின் இணையவழி பயணிகள் இருக்கை முன்பதிவு சேவைக்காக அடுத்த வருடம் 200 சொகுசு பஸ்கள் இணைக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.



 sltb.eseat.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்டு வந்த இணையவழி பயணிகள் இருக்கை முன்பதிவுச் சேவை மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



 இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏறக்குறைய 80,000 பயணிகள் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபா வருமானம் நேரடியாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



 கடந்த கிறிஸ்மஸ் விடுமுறை வார இறுதி நாட்களில் இந்த இருக்கை முன்பதிவு சேவைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதாகவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »