மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் மாதகல்பா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 குழந்தைகள் உட்பட்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குறித்த பேருந்து, ராஞ்சோ கிரான்டேவில் உள்ள மன்செரா ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 பேருக்கு படுகாயமடைந்துள்ளனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளது.