இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக பிரெஞ்சு தீவான ரீயூனியனுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு திரப்பி அனுப்பப்பட்ட நபர்கள் 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இழுவைப் படகில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளமை தெரியுவந்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் தற்போது இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை பெற்றுத்தருவதாக பொய்யான வாக்குறுதிகளுடன் வருகின்ற மனித கடத்தல்காரர்களை நம்பி ஏமாற வேண்டாமென இலங்கை கடற்படை பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.