Our Feeds


Friday, December 22, 2023

News Editor

ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள்


 10 அமைச்சுக்கான செயலாளர்களும் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 

கல்வி அமைச்சின் செயலாளராக  வசந்தா பெரேரா,

நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக என். எம். ரணசிங்க,

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க

சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி. கே. பி. சந்திரகீர்த்தி,

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன,

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க,

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மசிறி குமாரதுங்க,  

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சி. மொஹமட் நஃபீல்,

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக W.P.P.யசரத்ன,

நீர்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பண்டிகோரள ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர். எம். டபிள்யூ. எஸ். சமரதிவாகர மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ். எல். டி. கே.  விஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »