Our Feeds


Sunday, December 3, 2023

SHAHNI RAMEES

நாட்டில் 1206 மரண தண்டனைக் கைதிகள்....!

 

பாராளுமன்றத்தில் நேற்று(02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றப்பட்டபோது, ஆயுள் தண்டனை, மரண தண்டனை கைதிகள் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிகாட்டினார்.



அதன்படி நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள 1206 மரண தண்டனை கைதிகளில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 07 வெளிநாட்டுப் பிரஜைகள் அடங்கலாக 454 பேர் தங்களுடைய மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளனர்.



அத்துடன், சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளதுடன், இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.



மேலும், சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »