Our Feeds


Saturday, December 23, 2023

News Editor

வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பு


 வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 இந்தக் குழுவில் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 இவர்களில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தெரியவந்துள்ளது.


 குறித்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டமையும் விசேட அம்சமாகும்.


 அவர்கள் தமது அரசியல் எதிர்காலம் குறித்து தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என அண்மைய நாட்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.


 எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »