1,000 கிலோகிராம் இலங்கையின் சிலோன்
தேயிலையை பலஸ்தீனியர்களுக்கு அனுப்பும் என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, விரைவில் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தில் இதுபோன்ற நன்கொடைகளை இலங்கை அனுப்பும் என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.