Our Feeds


Wednesday, November 15, 2023

SHAHNI RAMEES

வரவு செலவுதிட்டத்தினை ஆதரிப்பதை தவிர SLPPக்கு வேறுவழியில்லை...!




 வரவு செலவுதிட்டத்தினை தயாரிக்கும் போது ஆதரவு

வழங்கியுள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தற்போது  அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜேவிபி தெரிவித்துள்ளது.


வரவுசெலவுதிட்டத்தினை இறுதி செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வேளை பொதுஜனபெரமுனவை சேர்ந்த இரண்டு நிதி இராஜாங்க அமைச்சர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய அமைச்சரவையில் ஹரீன்பெர்ணான்டோ மனுசநாணயக்கார இருவரையும் தவிர ஏனையவர்கள் அனைவரும் ஸ்ரீலங்காபொதுஜனபெரமுனவின் கீழ் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்லது தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டவர்கள் என விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.


2024 வரவுசெலவுதிட்டம் என்பது விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் குழந்தை என தெரிவித்துள்ள விஜித ஹேரத் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதை தவிர பொதுஜனபெரமுனவிற்கு வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »