Our Feeds


Wednesday, November 15, 2023

ShortNews Admin

கோட்டாவை ஆட்சி செய்ய விட்டிருந்தால் நாட்டுக்கு இந்நிலை வந்திருக்காது - SLPP, MP ரஞ்சித் பண்டார



நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டை கடன் வலையில் சிக்க வைத்ததினால் தற்போது அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனவும் தெரிவித்தார்.


இந்த நாட்டில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்தக் குழுவும் அவமானப்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கச் செயல்பட்டதால்தான் கட்சிக்காரர்கள் அவமானப்படுத்தப்படுகிறதே  தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »