Our Feeds


Thursday, November 30, 2023

Anonymous

குடும்பத்தை சீரழிக்கும் மதுபானசாலைகளை திறந்து, உயிர்காக்கும் வைத்தியசாலைகளை மூடுகிறார்கள் - அரசாங்கத்தை சாடும் உதயகுமார் MP

 



“நாட்டில் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானசாலைகள் நகரங்கள் தோறும் திறந்து வைக்கப்படுகிறது. “உயிர்களை காக்கும் வைத்தியசாலைகள் மாவட்டங்கள் தோறும் மூடப்பட்டு வருகின்றது.” உதயகுமார் எம்.பி


கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போயுள்ளார். 

 

இருந்தாலும் தற்போது தொழில் ரீதியில் வைத்தியராக இருக்கும் கௌரவ ரமேஷ் பத்திரண அவர்கள் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

ஒரு நாட்டினது வளர்ச்சி குறிகாட்டியாக கல்வி மற்றும் சுகாதாரம் கருதப்படுகிறது. 

 

கல்வியிலும் சுகாதாரத்திலும் முன்னோக்கி பயணிக்கும் நாட்டில் பொருளாதாரம் வளமானதாக காணப்படும். 

 

உலகிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடுகளாக இலங்கையும் கொஸ்டரிக்காவும் குறிப்பிடப்படுகின்றன.

 

அந்த வகையில் தலைசிறந்த சுகாதார கட்டமைப்புடன் கூடிய நமது நாட்டின் இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும். 

 

ஆனாலும் சில அதிகார மோகம் கொண்ட ஆட்சியாளர்களால் நமது நாட்டின் சுகாதார சேவை சீரழிவை நோக்கி பயணிக்கிறது. 

 

“நாட்டில் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானசாலைகள் நகரங்கள் தோறும் திறந்து வைக்கப்படுகிறது.“”


ஆனால், “உயிர்களை காக்கும் வைத்தியசாலைகள் மாவட்டங்கள் தோறும் மூடப்பட்டு வருகின்றது.”

 

சுகாதார அமைச்சின் புதிய தகவல்படி நாட்டில் சுமார் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

 

மேலும் நூற்றுக்கணக்கான வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. 


State healthcare system in severe crisis - 

40 Hospitals closed, 

100 on the brink of closure.

In a dire revelation, it has come to lime light that the state healthcare system is facing a severe crisis, with 40 state run hospitals shuttered and an additional 100 teetering on the brink of closure.

The gravity of the situation is particularly pronounced in the northern province, as well as the Puttalam and Nuwaraeliya Districts, where Hospitals are either already shut down or slated for closure.


Already NE district health sector is severely effected due to lack of medical facilities 

If the hospitals are also shutdown then the situation will go from bad to worse


As the entire nation knows, 

Even during Corona pandemic people of the plantation sector worked tirelessly - contributing immensely for our country’s economy 

But they were given  ill mother treatment in the health and education sector for the last 200 years 

So, I request you take necessary steps to improve the health care system in the plantation sector and take measures to prevent the closure of hospitals in the NE district and island wide as a whole


வைத்தியர்கள், தாதியர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாகவும் மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்ட வளப்பற்றாக்குறை காரணமாகவும் வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

 

இதில் கவலை தரக்கூடிய விடயமாக, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்டத்தில் அதிக வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. 

 

பெருந்தோட்ட பகுதிகளை எடுத்துக் கொண்டால் அங்கு தோட்ட வைத்தியசாலைகள் பல தற்போது மூடப்பட்டுள்ளன. 

 

பெருந்தோட்ட கம்பெனிகளால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த வைத்தியசாலைகள் இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. 

 

கௌரவ அமைச்சர் அவர்களே 

 

நாட்டின் தேசிய சுகாதார கட்டமைப்பில் பெருந்தோட்ட பகுதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற உரிமை கோஷம் காலம் காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 

 

அதனை நிறைவேற்றும் வகையில் தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு அரசுடமையாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான தீர்மானம் இதே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

ஆனால், இன்றுவரை அது நடைமுறையில் அமுல்படுத்தப்படாமல் இருப்பதன் மர்மத்தை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்து அந்த மக்களின் மீது அதிக கரிசனை கொண்ட நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி மலையக பெருந்தோட்ட மக்களின் நீண்ட கால சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

 

அத்துடன் மலையக மக்களின் சுகாதார பின்னடைவிற்கு மேலும் சில காரணிகளாக முறையான மலசலகூட வசதி இல்லாமை, சுத்தமான குடிநீர் வசதி இல்லாமை, முறையான கழிவகற்றல் வசதி இல்லாமை போன்றவையும் காணப்படுகின்றன. 

 

இது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கிறேன். 

 

நுவரெலியா மாவட்ட மக்கள் அதிகமாக பயன்பெறும் நுவரெலியா மற்றும் கிளங்கன் வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்வதுடன் அங்கு நிலவும் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், கிளங்கள் வைத்தியசாலையில் கடந்த மூன்று மாத  காலமாக கண் சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத நிலைமை காணப்படுகிறது.

 

அம்பகமுவ பகுதியில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வைத்திய சேவைகளை பூர்த்தி செய்யும் வசதியை கிளங்கன் வைத்தியசாலை மட்டுமே வழங்குகிறது.

 

இதேபோன்று, நுவரெலியா பகுதியில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையாக நுவரெலியா வைத்தியசாலை மட்டுமே காணப்படுகிறது.

 

இதனால் மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டக்கலை, லிந்துலை, மன்ராசி, வட்டவளைஆகிய பிரதேச வைத்தியசாலைகளை தரமுயர்த்தி அவற்றுக்கான ஆளணி மற்றும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கிறேன்.

 

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பியூலன்ஸ் சேவை இல்லாத வைத்தியசாலைகள் பல உள்ளன. அத்துடன் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையும் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்திய அரசாங்கம் வழங்கிய இந்த போக்கிஷியம் நமது மக்களுக்கு கிடைக்காத்து

துரதிஷ்டம்

 

இவை குறித்தும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

 

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பின்தங்கிய பகுதி பாடசாலை மாணவர்கள் இடையே மந்தபோஷனம் அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் போஷாக்கின்மை அதிகரித்து காணப்படுகிறது 

உலக சுகாதார ஸதாபனம், மற்றும் சுகாதார அமைச்சு எனபனவற்றின் அறிக்கையின்படி மந்தபோஷனை மற்றும் போஷாக்கின்மை நுவரெலியா மாவட்டத்திலும் பெருந்தோட்ட  பகுதிகளிலுமே அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது

இது குறித்து பல தடவைகள் இந்த சபையில் கூறியிருக்கிறேன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம் ஆனால், எவ்வித பலனும் இல்லை

 

ஆக்வே, உணவு பாதுகாப்புக்கு முறையான விழிப்புணர்வு மற்றும் நிவாரண திட்டங்கள் அமுல்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.  


கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் வைட்டமின்கள் பல மாதங்களாக வழங்கபபடவில்லை.

கல்சியம் மாத்திரைகளுக்கு

கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் 

கூறப்படுகிறது.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே 

 

இன்றைய உலகில் மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது தொற்று நோய்களாகும்.

 

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நமது நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் விழுந்தது. பல உயிர்கள் பறிக்கப்பட்டது

 

அதேபோல, நாட்டில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

 

நாட்டின் சுகாதார துறையை சீரழிக்கும் மற்றும் ஒரு விடயமாக மருந்து இறக்குமதி மாபியா தலைதூக்கி உள்ளது. 

 

“தரக்குறைவான இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் தரக் குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவது சகஜம் என்றாலும்”  

“நாட்டு மக்களின் உயிர்களை அடகுவைத்து பிழைப்பு நடத்தும் ஊழல் பேர்வழிகளிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும்.”

 

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் ஊழல்வாதிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட வேண்டும். அவ்வாறான சட்டங்களுக்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »