இலங்கைக்கு வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து உண்மைகளை சுட்டிக்காட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் யோசனையொன்றை முன்வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர், இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் இந்தக் யோசனையை முன்வைத்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவர் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார்.
ஐ.சி.சி. தலைவர் வருகை தந்ததன் பின்னர் அவரை பாராளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து,பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஜனநாயகம் என்ற போர்வையில் பொய் கூறி,இந்நாட்டில் கிரிக்கெட்டை எவ்வாறு அழித்து வருகின்றது என்பதை அவருக்கு விளக்க வேண்டும்.
ஐ.சி.சி. தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து உண்மை நிலையை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். இல்லையெனில் தவறான கருத்து சர்வதேசத்திற்கு செல்லும்.“ எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்