Our Feeds


Thursday, November 30, 2023

Anonymous

அமெரிக்க அழைப்பை நிராகரித்தார வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ ஜாங்

 



வடகொரியாவின் ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னின் சசோதரி கிம் யோ ஜாங், வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது.


இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா இடைநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில், ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.


ஐ.நா. பாதுகாப்புச்சபை கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு "வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமானது. அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுவதாகவுள்ளது" என விமர்சித்திருந்தார்.


மேலும், "எந்தவித நிபந்தனை இல்லாமல் பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், நேரத்தையும் பேசக்கூடிய கருத்தையும் வடகொரியாவே முடிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


ஆனால், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யொ ஜாங் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.


செயற்கைக்கோள் மூலம் மிரட்டல், மற்ற ஆயுதங்களை செயல்படுத்துதல் போன்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், "ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. எனவே, வடகொரியா அந்த நோக்கத்திற்காக ஒருபோதும் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது." என்றுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »