“நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல! எமது நாட்டின் சுதந்திர போராளிகள்” என குறிப்பிட்ட இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் மேடையிலேயே கண் கலங்கினார்.
கொழும்பில், இன்று இலங்கை கம்யூனிச கட்சி ஏற்பாடு செய்திருந்த “பலஸ்தீன விடுதலை மாநாட்டில்” இந்த சம்பவம் நடந்தது.
இலங்கை கம்யூனிச கட்சியின் பாலஸ்தீன மக்களுக்கான விடுதலை மாநாடு கொழும்பு, புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட மாநாட்டில் இரட்டை நாடு, பாலஸ்தீன சுதந்திர தேசமே தீர்வு என்ற முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம் (SLMC), பௌசி, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், Pro. திஸ்ஸ விதாரண, டலஸ் அலகப்பெரும, SJB செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, வாசுதேவ நாணயக்கார, அதாவுல்லாஹ், துஷ்மந்த (SLFP) டிலான் பெரேரா மற்றம் முன்னாள் MP க்கலான அமீர் அலி (ACMC), நளிந்த ஜயதிஸ்ஸ (JVP), பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வின் ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் வருகை தந்து விட்டு சென்றிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் பாலஸ்தீன விடுதலைக்கான மாநாட்டின் தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க சிங்கள மொழியிலும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பாயிஸ் மன்சில் தமிழ் மொழியிலும் மக்கள் முன் சமர்ப்பித்தனர்.