Our Feeds


Thursday, November 23, 2023

News Editor

இன்று முதல் அஸ்வெசும கொடுப்பனவுகள்

 

அஸ்வெசும பயனாளர்கள் செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று (23) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளி குடும்பங்களுக்காக 8571 மில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்தி முடிக்கவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »