ஹாலிஎல உடுவர பிரதேச வீதியில் இன்று (15) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த விதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது மாலையில் பெய்து வரும் தொடர் மழையால் குறித்த வீதியில் பெரிய மண்மேடு சரிந்து போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டதால் காலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் இடிந்து விழுந்த பாரிய மேட்டின் மீது பாடசாலை மாணவர்களும் ஏனையவர்களும் ஏறி ஆபத்தான முறையில் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.