Our Feeds


Wednesday, November 15, 2023

Anonymous

வெல்லம்பிடிய பாடசாலையில், சுவர் இடிந்து விழுந்து மாணவி ஒருவர் பலி – ஐந்து மாணவர்கள் காயம்.

 



வெல்லம்பிட்டிய - வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


முதலாம் தர மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »