Our Feeds


Sunday, November 12, 2023

SHAHNI RAMEES

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களுக்கான ஆட்சேபனைக்காலம் நிறைவு !



 


சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இழப்பீட்டுக்

கோரிக்கை மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்துள்ளது. 


முன்னதாக, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம், கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்கள் தமது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வழங்கியதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.


அதன் பின்னர், அக் கப்பலின் உரிமையாளர்கள் தாக்கல் செய்திருந்த ஆட்சேபனைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மேலதிக சமர்ப்பிப்புகளைச் செய்திருந்தது. 


அதனடிப்படையில், செப்டம்பர் 19ஆம் திகதியன்று எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன் செயற்பாட்டாளர்கள், கப்பலின் உரிமையாள் ஆகியோரிடமிருந்து பாதிப்புக்கு உள்ளான கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 


அதனடிப்படையில், ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் காப்புறுதியாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமீபத்திய சந்திப்புகளின் பலனாக 878,650.53 டொலர்களும், 16,315,451.05ரூபா நிதியும் வழங்கப்பட்டிருந்தது. 


இதனையடுத்து ஏனைய பாதிப்புக்கள் சம்பந்தமாக நீதிமன்றில் உள்ள வழக்கிற்கான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வரையில் கால அவகாசம் வழஙக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்த அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளது.


இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை முடிவடையும் வரை, கப்பல் மூழ்கிய பகுதியை பராமரிப்பாளர் கண்காணிக்கவுள்ளதோடு எஞ்சியிருக்கும் சேதமடைந்த பகுதிகளை அகற்றுவதற்கும் செயலிழக்கச் செய்வதற்குமு; சான்றளிக்கப்பட்ட தரப்பினரிடத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »