காசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காஸாவின் மிகப் பெரும் மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இன்று பலவந்தமாக நுழைந்துள்ளனர்.
மருத்துவமனையின் தரைத்தளம் உள்பட அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் இஸ்ரேல் படையினர் நுழைந்துள்ளனர்.
காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனைகளில் 60 வீதமான மருத்துவமனைகள் செயல்பாடு மொத்தமாக முடங்கியுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 35 மருத்துவமனைகளில் 21 மருத்துவமனைகள் மொத்தமாக முடங்கியுள்ளன.
இந்நிலையில் தான் தற்போது அங்குள்ள மிகப் பெரும் மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையையும் இஸ்ரேலிய ராணுவம் அழித்து வருகின்றது.