Our Feeds


Monday, November 20, 2023

ShortNews Admin

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசேட அதிரடிப் படை பாதுகாப்பு!



வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.


அவர் உயிரிழக்கும் முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல சித்திரவதைகள் அம்பலமாகின.


இந்நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், இளாவாலை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.


உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்காமல் கண் துடைப்பாக சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெறுமனே இடமாற்றம் வழங்கிவிட்டு பொலிஸார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


பு.கஜிந்தன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »