Our Feeds


Wednesday, November 1, 2023

Anonymous

என்னை அழைக்கவில்லை தான், ஆனாலும் வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் - இது மனோ பாணி..!

 



எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், "நாம்-200" என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.


இன்று நண்பகல், இதுபற்றி அறிந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நான் என் கையெழுத்தில், உடனடியாக அழைப்பு கடிதம் அனுப்புகிறேன். கலந்துக்கொள்ளுங்கள்”. என்று கூறினார். “நமது மக்கள் தொடர்பாக உங்கள் அரசாங்க விழாவாக இது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை நன்கு விளங்குகின்றது. ஆகவே, அங்கே வந்து அதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே நான் கலந்துக்கொள்ளவில்லை” என ஜனாதிபதியின் கருத்தை நாகரீகமாக நான் மறுத்து விட்டேன்.


பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஒரு விசேட குழுவை, இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் அமைக்க உள்ளதாக தான் அறிவிக்க உள்ளதாகவும், “அக்குழுவில் பங்கு பெற்று உங்கள் யோசனைகளை முன் வையுங்கள்” என ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். உங்கள் அரசாங்கம் மக்கள் தொடர்பில் செய்யும் நல்ல காரியங்களை நாம் எப்போதும் வரவேற்போம் என பதிலளித்தேன்.           


தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்.பி என்ற முறைகளில் எனக்கு அழைப்புகள் தரப்படாவிட்டாலும் கூட, இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட இந்திய, தமிழக அரசியல் தலைவர்களை "வருக, வருக" என இலங்கை நாட்டுக்கும், தலைநகர் கொழும்புக்கும் வரவேற்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »