பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் கடை உரிமையாளரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னிபிட்டிய மாம்புல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு வந்த நபரொருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடையின் உரிமையாளரை தாக்கியதில், சம்பவத்தை சமரசம் செய்ய வந்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.